/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் டயர் திடீரென 'பஞ்சர்' அதிகாலையில் பயணிகள் அவதி
/
அரசு பஸ் டயர் திடீரென 'பஞ்சர்' அதிகாலையில் பயணிகள் அவதி
அரசு பஸ் டயர் திடீரென 'பஞ்சர்' அதிகாலையில் பயணிகள் அவதி
அரசு பஸ் டயர் திடீரென 'பஞ்சர்' அதிகாலையில் பயணிகள் அவதி
ADDED : ஜன 31, 2024 05:19 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பஸ் பழுதடைந்ததால், பயணிகள் அவதியடைந்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4:00 மணியளவில், சென்னைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. விழுப்புரம் அடுத்த கோலியனுார் கூட்ரோடு அருகே விக்கிரவாண்டி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது.
பொய்யப்பாக்கம் சமத்துவபுரம் குடியிருப்பு எதிரில் காலை 5:30 மணியளவில் சென்றபோது, பஸ்சின் இடதுபுற பின் பக்க டயர் திடீரென பஞ்சரானது.
உடனடியாக டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை பிரேக் போட்டு,சாலையோரமாக நிறுத்தினார்.இதனால், பயணிகள் காயமின்றி தப்பினர்.
அதிகாலை நேரம் என்பதால், மற்ற பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் அவதியடைந்தனர். பின்னர், அடுத்தடுத்த பஸ்களில் பயணிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து காலை 7:00 மணியளவில் பணியாளர்கள் 2 பேர் வந்து, பஸ்சில் மாற்று டயரை பொருத்தினர். காலை 8:00 மணிக்கு மேல், அந்த பஸ் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.