/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போட்டி தேர்வு பயிற்சி துவக்க விழா
/
அரசு போட்டி தேர்வு பயிற்சி துவக்க விழா
ADDED : செப் 12, 2025 04:04 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
வழுதரெட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டப நுாலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
எம்.பி., ரவிக்குமார், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி முன்னிலை வகித்தனர். வன்னியர் பொதுசொத்து நல வாரிய தலைவர் ஜெயராமன் வரவேற்றார். நல வாரியத்தின் உறுப்பினர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., விளக்கவுரை ஆற்றினார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில், புதுச்சேரி ஏ.ஜி.பத்மாவதி இருதய மருத்துவமனை சேர்மன் இளங்கோவன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், கலைச்செல்வி, சங்கீதஅரசி, நகர் மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, ேபரூராட்சி சேர்மன்கள் அப்துல்சலாம், மீனாட்சி ஜீவா, துணை சேர்மன்கள் வீரராகவன், ஜீவிதா ரவி, உதயகுமார், சித்திக் அலி, பாலாஜி, அசோக், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், மீனா வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஷ், மணி மண்டப பொறுப்பாளர் செந்தில், தாசில்தார்கள் செல்வமூர்த்தி, கனிமொழி, கல்வியாளர்கள் கோதகுமார், ேசாழன், அரசு வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், உதவியாளர் ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வன்னியர் பொதுசொத்து நல வாரியம் மற்றும் ஏ.ஜி.பத்மாவதி கோவிந்தசாமி மருத்துவக் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.