/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
அரசு வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அரசு வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அரசு வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஜன 23, 2025 05:40 AM
விக்கிரவாண்டி: வேம்பி ஊராட்சியில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி ஊராட்சியில் 15 வது மத்திய மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இருளர் குடியிருப்பு.
மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் நேரில் பார்வையிட்டார்.
இருளர் குடியிருப்பில் வசதிகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
கூடுதல் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சப்- கலெக்டர் திவ்யான் ஷூ நிகம், செயற்பொறியாளர் ராஜா, பி.டி.ஓ., க்கள் சுபாஷ் சந்திர போஸ், நாராயணன், ஒன்றிய பொறியாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.