/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பணியாளர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்
/
அரசு பணியாளர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்
ADDED : அக் 12, 2024 11:03 PM
விழுப்புரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம், விழுப்புரம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார், அமைப்பு செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். செயலாளர் டேவிட் குணசீலன், துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், மத்திய செயற்குழு உறுப்பினர் சதீஷ், செயற்குழு உறுப்பினர்கள் உட்படபலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படியை 1000 ரூபாயாக உயர்த்த வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் குமரவேல் நன்றி கூறினார்.