/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் மக்களுக்கு தெரியாமல் போகும் அரசு திட்டங்கள்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் மக்களுக்கு தெரியாமல் போகும் அரசு திட்டங்கள்
அதிகாரிகள் அலட்சியத்தால் மக்களுக்கு தெரியாமல் போகும் அரசு திட்டங்கள்
அதிகாரிகள் அலட்சியத்தால் மக்களுக்கு தெரியாமல் போகும் அரசு திட்டங்கள்
ADDED : ஜன 30, 2024 06:32 AM
கண்டாச்சிபுரம் தாலுகாவில் தமிழக அரசின் திட்டங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் மறைக்கும் அதிகாரிகளால் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு கிராம ஊராட்சிகளிலும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் பயனடையும் வகையில் நடைபெறும் பல அரசுத் திட்டங்கள் மற்றும் உதவிகளை அரசு நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனை அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக அரசு, செய்தி வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால், கண்டாச்சிபுரம் தாலுகாவில் கடந்த பல மாதங்களாக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சிகளை முறையாக ஊடகங்களுக்கு தெரிவிப்பதில்லை. மாறாக அந்தந்த துறையில் வைத்திருக்கும் 'வாட்ஸ் ஆப்' குழுவில் வெளியிட்டு தங்கள் பணி முடிந்ததாக கருதுகின்றனர்.
இதனால், பல நல்ல திட்டங்கள் கூட பொதுமக்களுக்கு தெரியாமல் போகிறது. பள்ளிக் கல்வித்துறையில் கூட பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறன் வெற்றிகள், சாதனைகளைக் கூட தெரிவிப்பதில்லை. இதனால் மாணவர்களின் சாதனைகள் வெளியில் தெரியாமல் போகிறது.
எனவே கண்டாச்சிபுரம் தாலுகாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளையும், பொதுமக்கள் பயனடையும் திட்டங்களையும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், தங்களின் மேல் அதிகாரிகளுக்கு மட்டும் நடந்ததாக தகவல் அனுப்புவதை தவிர்த்து அங்கீகரிக்ககப்பட்ட ஊடகங்களுக்கும் தெரிவிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.