/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறுமைய விளையாட்டு போட்டி அரசு பள்ளி சாம்பியன்
/
குறுமைய விளையாட்டு போட்டி அரசு பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 06, 2025 11:18 PM

விக்கிரவாண்டி: அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குறுமைய விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் வென்றனர்.
கண்டாச்சிபுரம், குறு மைய பாரதியார் தின விளையாட்டுப்போட்டி, ஆலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில், 30 பள்ளிகளை சேர்ந்த, 1000 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
அதில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 17, 19 வயதுக்குட்பட்ட, இருபாலர் பிரிவிலும் கோ-கோ போட்டியில், முதலிடம்; 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு ஹாக்கியில் முதலிடம்; 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் கால்பந்து போட்டியில் முதலிடம்; தடகளத்தில் ஒட்டு மொத்த சாம்பியன், வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.இ.ஓ., சேகர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அய்யனார், கிருஷ்ணகுமார், ஒளி, உடற்கல்வி இயக்குனர் சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுபாஷ், விமல்ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.