/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
/
மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : நவ 22, 2025 04:49 AM

செஞ்சி: மாநில அளவிலான ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்ற நொச்சலுார் அரசு உயர்நிலைப்பள்ளி. மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த நொச்சலுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மயிலம் பொறியியல் கல்லுாரியில் நடந்த 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
இதன் மூலம் மாநில அளவில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றனர்.
இவர்கள் மஸ்தான் எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவிகள் பயிற்சி பெறுவதற்கும், போட்டிகளில் பங்கேற்பதற்கும் தேவையாக உபகரணங்களை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, தலைமை ஆசிரியர் கோபிநாத், ஆசிரியர்கள் ரோஸ்லின், விஜயகுமார் உடன் இருந்தனர்.