/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
/
அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
ADDED : அக் 31, 2025 02:34 AM

கண்டாச்சிபுரம்:  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கோகோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கோகோ போட்டியில்  முதலிடம் பிடித்தனர்.
இதனையடுத்து ராணிப்பேட்டையில் நடக்க உள்ள மாநில கோகோ போட்டியில் விளையாட தேர்வு பெற்றனர். இந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  ஜெயசீலன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
உதவித்தலைமை ஆசிரியர் முருகவேல் முன்னிலை வகித்தார்.
பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். கணினி ஆசிரியர் குரு, உடற்கல்வி ஆசிரியர் ஜான்சன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்  விளையாட்டுத் திறன் மற்றும் எதிர்காலம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். ஆசிரியர் கணபதி நன்றி கூறினார்.

