/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவர்கள் கோ கோ போட்டியில் வெற்றி
/
அரசு பள்ளி மாணவர்கள் கோ கோ போட்டியில் வெற்றி
ADDED : ஜூன் 26, 2025 11:42 PM

விக்கிரவாண்டி: மாவட்ட அளவிலான கோ கோ விளையாட்டுப் போட்டியில் அத்தியூர் திருக்கை அரசு பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.
விழுப்புரம் - கடலுார் மாவட்ட அளவிலான கோ கோ விளையாட்டுப் போட்டி பண்ருட்டியில் திருவள்ளுவர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது. போட்டியில், விக்கிரவாண்டி தாலுகா அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தனர். சிறந்த வீரராக தமிழரசன் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசங்கர் சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார்.
மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் சரவணன், முன்னாள் மாணவர்கள் கமலக்கண்ணன் பாலாஜி, அதிர்ஷ்ட குமார், ஊராட்சி தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் கீதா குருநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில் அதிபன், பள்ளி மேலாண்மை குழு அமரா, காளியம்மாள், உதயா, அருள் தேவி மற்றும் பெற்றோர் பாராட்டினர்.