/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொட்டு நீர் பாசனத்திற்கு அரசு மானியம் வழங்கல்
/
சொட்டு நீர் பாசனத்திற்கு அரசு மானியம் வழங்கல்
ADDED : ஜூலை 10, 2025 09:41 PM
விக்கிரவாண்டி; கரும்பு சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது.
முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு விரிவாக்க துறை செய்திக்குறிப்பு:
முண்டியம்பாக்கம் செம்மேடு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் தற்சமயம் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் லாபம் தரும் தொழில் நுட்பங்களில் சொட்டுநீர் பாசன முறை மிகவும் முக்கியமானது.
இதனால் நீர் சேமிப்பு, அதிக மகசூல் தரும் தொழில்நுட்பம், கரும்பில் களை கட்டுப்பாடு, விதை கரும்பின் தேவை குறைவு. உர சத்துக்கள் நேரடியாக வேரின் அடிப்பகுதியில் கொடுக்கப்படுவதால் உர உபயோகத்தின் அதிகரித்து உரம் வீணாவது தடுக்கப்படுகிறது.
ஆட்கள் தேவை குறைவும், இதனால் இடை உழவும், அறுவடையும் செய்ய முடியும். சீரான கட்டை கரும்பு வளர்ச்சி துரிதமாகிறது. தமிழக அரசு சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் தருவதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
கரும்பு சாகுபடியில் விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து அதிக மகசூலும் லாபமும் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

