ADDED : டிச 14, 2025 06:00 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியத்தில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், வெட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஓட்டுச்சாவடி எண்கள் 257, 258 ல் நடந்த பரப்புரையை, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி துவக்கி வைத்து, சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
தொகுதி பார்வையாளர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் ரவிதுரை, ஒன்றிய குழு தலைவர் சங்கீதா அரசி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், அமைப்புசாரா ஓட்டுநரணி துணை அமைப்பாளர் சபரிமுத்து, இலக்கிய அணி ராஜசேகர், கிளைச் செயலாளர்கள் கார்த்திகேயன், வீரமுத்து, மார்கண்டேயன், ஓட்டுச்சாவடி முகவர்கள் பிரகாஷ், அஜீத்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
