UPDATED : ஆக 18, 2026 06:11 PM
ADDED : ஆக 18, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தமிழக அரசின் நுாறு நாள் சாதனையை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் நிகழ்ச்சி விக்கிரவாண்டியில் த.வெ.க., சார்பில் நடைபெற்றது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று நுாறு நாட்கள் நிறைவடைந்ததை யொட்டி, அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு த.வெ.க., சார்பில் எடுத்துரைக்கும் நிகழ்ச்சி, விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில், நடைபெற்றது. தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார்.
இதில், பங்கேற்ற நிர்வாகிகள், தமிழக அரசின் நுாறு நாட்கள் சாதனைகள் குறித்து மக்களிடம் கூறினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சிவா செய்திருந்தார்.
