ADDED : பிப் 02, 2026 04:16 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தமிழக கவர்னர் ரவிக்கு வருவாய்த் துறையினர் வரவேற்பு அளித்தனர்.
தமிழக கவர்னர் ரவி நேற்று காலை 11:15 மணியளவில் வடலுார் வள்ளலார் மடம் சத்திய ஞான சபையில் நடைபெறும் தைப்பூச விழாவில் பங்கேற்கச் சென்றார். செல்லும் வழியில் விக்கிரவாண்டி டோல் கேட்டில் உள்ள ஓட்டலில் காபி சாப்பிட வந்தார்.
அப்போது அவரை விழுப்புரம் டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், விக்கிரவாண்டி தாசில்தார் செல்வமூர்த்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். துணை தாசில்தார் விஜயன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ ., ஸ்ரீதர் உடன் இருந்தனர்.
தனி அறையில் தங்கி ஓய்வெடுத்து 15 நிமிட இடைவெளிக்கு பிறகு 11:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
எஸ்.பி., சாய் பிரனீத், டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
