/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசியலில் கவர்னர் தலையீடு மோசமான ஒன்று: பொன்முடி
/
அரசியலில் கவர்னர் தலையீடு மோசமான ஒன்று: பொன்முடி
ADDED : ஜன 16, 2025 03:44 AM
விழுப்புரம், :   ''தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கூட கவர்னருக்கு பிடிக்கவில்லை'' என அமைச்சர் பொன்முடி கூறினார்.
அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு,  தமிழ்மொழி என்றாலே வெறுப்புடைய ஒருவரை தான் (கவர்னர்) இங்கு போட்டுள்ளனர்.
மொழி உணர்வுள்ள தமிழ்நாட்டின் அரசியலில்  கவர்னர் தலையிடுவது மிக மோசமான ஒன்றாகும். இதை தான் சட்டசபையில் தமிழக முதல்வர் எடுத்து காட்டியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கூட அவருக்கு, எந்தளவுக்கு பிடிக்கவில்லை என்பதை நீங்கள் கடந்த காலங்களில் உணர்ந்துள்ளீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ' கவர்னர் பொங்கல் வாழ்த்து செய்தியை அவருடைய எக்ஸ் தளத்தில் சமஸ்கிருதத்தில் பதிவு செய்துள்ளது பற்றி கேட்டதற்கு, ''பொங்கலை பற்றி, கவர்னர் எழுதியிருப்பது வியக்கத்தக்கது அல்ல. இது அவருடைய பழக்கம், இவர் சார்ந்துள்ள கட்சி வலியுறுத்திய நோக்கமாகும்' என்றார்.

