/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவர்கள் கல்லுாரி களப்பயணம்
/
அரசு பள்ளி மாணவர்கள் கல்லுாரி களப்பயணம்
ADDED : ஜன 25, 2024 05:35 AM

மயிலம், : மயிலம் ஒன்றியத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கல்லுாரி களப்பயணம் சென்றனர்.
மயிலம், பாதிராப்புலியூர், தழுதாளி. ஆலகிராமம், நெடிமோழியனுார், பெரியதச்சூர், வீடூர், ரெட்டணை, உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளின் சார்பில் கல்லுாரி கலை பயணமாக மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாளைய சுவாமிகள் கல்லுாரிக்கு மாணவ மாணவியர்கள் வந்திருந்தனர்.
நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லுாரி படிப்பு தேர்வு செய்வது எப்படி, எங்கு படிப்பது, என்ன படிப்பது போன்ற பல்வேறு மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் மற்றும் ஆசிரியகள் விளக்கம் அளித்தனர்.
மயிலம் தமிழ் கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இதில் கல்லுாரி உதவி பேராசிரியர் சிவசுப்பிரமணியம், பள்ளி ஆசிரியர்கள் வீரமணி, குப்பு முத்து ராசா, பஞ்சாட்சரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.