ADDED : ஜூன் 01, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டதாரி பெண் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகள் சிந்து என்கிற கலையரசி, 30; பி.எஸ்சி., பட்டதாரி. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். திருமணமாகாத மன உளைச்சலில் இருந்த கலையரசி, நேற்று விழுப்புரம் செல்லியம்மன் கோவிலில் தெருவில் உள்ள தனது பாட்டி தனலட்சுமி வீட்டிற்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.