ADDED : மார் 27, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டதாரி பெண் காணாமல்போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் சகாதேவன்பேட்டை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் மகள் தனலட்சுமி, 23; இவர், பி.எஸ்.சி., படித்துவிட்டு, புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.