/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 17, 2025 01:49 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், 24வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, இ.எஸ்., கல்விக்குழுமம் நிர்வாக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அகிலா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் செயலாளர் வின்சென்ட், மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், 'கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். பெற்றோர் உங்களுக்காக தியாகம் செய்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்ததாக, உங்களின் ஆசிரியருக்கு நன்றியை கூறுங்கள். மற்றவர்களுக்காக நீங்கள் வாழ்ந்தால் உங்களின் வாழ்வு செழிப்பாக இருக்கும்' என்றார்.
தொடர்ந்து, ஐ.சி.டி., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் பேசுகையில், 'கல்லுாரியை முடித்த நீங்கள் நண்பர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் பெற முடியும். வாய்ப்புகள் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. உங்களுக்கான வாழ்க்கை பயணத்தை நோக்கி செல்லுங்கள்' என்றார்.
விழாவில், 2023 மற்றும் 2024 ஆகிய கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு நிறைவு செய்த 1,212 மாணவிகள் பட்டம் பெற்றனர். துறை சார்ந்த மற்றும் பல்வேறு பாடங்களில் முதன்மை பெற்ற 56 மாணவிகளுக்கு கல்லுாரி அறக்கட்டளை சார்பாக விருது, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லுாரி தலைவர் சாமிக்கண்ணு, தேர்வு கட்டுப்பாட்டாளர், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.