/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மே 26, 2025 12:24 AM

கண்டாச்சிபுரம் : கஸ்துாரி பாய் காந்தி-ஜால் மகளிர் கல்லுாரியில் 5 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மழவந்தாங்கல் முன்னாள் ஊராட்சி தலைவர் நாராயணசாமி, முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன், அடுக்கம் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சிந்தாமணி வரவேற்றார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி பதிவாளர் ராஜசேகரன் விழாவைத் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து வாழ்வின் எதிர்கால சவால்கள் குறித்து மாணவிகளிடையே பேசினார். தொடர்ந்து 220 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் நடராஜன் மற்றும் கண்டாச்சிபுரம், மழவந்தாங்கல், அடுக்கம் பகுதியிலிருந்து பொதுமக்கள் பங்கேற்றனர். கல்லுாரி நிர்வாகி சுபலட்சுமி நன்றி கூறினார்.