/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
வானுார் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 10, 2025 11:42 PM

வானுார் : வானுார் அரசு கலைக்கல்லுரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் சக்கரபாணி எம்.எல்.ஏ., 130 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினார். ஒன்றிய சேர்மன் உஷா முரளி வாழ்த்திப் பேசினார்.
விழாவில் முன்னாள் கல்லுாரி கல்வி இணை இயக்குநர் ராவணன், மாணவர்கள் எந்த பாடப்பிரிவு எடுத்தாலும், சிறந்த இடத்தை பிடிக்க கடின முயற்சி அவசியம் என அறிவுறுத்தினார்.
ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் காந்திமதி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கணிதத்துறை தலைவர் எழிலரசி நன்றி கூறினார்.