/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 28, 2025 04:55 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 27வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமநாதன் வாழ்த்திப் பேசினார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற டோட் கேம்பஸ் செயலாளர் வின்செட் 101 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
தாளாளர் சரவணன் பேசுகையில், 'பட்டம் பெரும் மாணவர்கள் புதிது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். புதிதாக கற்றுக் கொண்டே இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும்' என்றார். கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் கல்பனா சரவணன் நன்றி கூறினார்.