ADDED : நவ 24, 2024 04:58 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த செம்மார் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயனன், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, உதவி இயக்குனர் விக்னேஷ், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு சேர்மன் ஓம்சிவசக்திவேல் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஷீபாராணி வரவேற்றார்.
கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக செய்து தரவேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
பி.டி.ஓ.,க்கள் ரவி, பாலசுப்ரமணியன், தாசில்தார் செந்தில், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் கோமதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி துணைத் தலைவர் சீனு உட்பட பலர் பங்கேற்றனர்.