/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஈச்சங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்
/
ஈச்சங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்
ADDED : நவ 02, 2025 03:51 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஈச்சங்குப்பத்தில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் அரசு குமாரி அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியச் சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஏழுமலை வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கிராமத்தில் சிமென்ட் சாலை, பள்ளிக்கூடத்தில் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்து விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கூட்டத்தில், ஆசிரியை கோகிலா மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

