/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாடிப்பள்ளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
/
பாடிப்பள்ளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ADDED : அக் 12, 2025 04:34 AM

செஞ்சி : செஞ்சி ஒன்றியம் பாடிப்பள்ளம் ஊராட்சி, மூலநெல்லிமலையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொதுமக்களிடையே பேசினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஒன்றிய பற்றாளர் சீதாராமன் பார்வையாளராக கலந்து கொண்டார்.
ஊராட்சி செயலாளர் சஞ்சய் காந்தி தீர்மானங்களை வாசித்தார். அதில் ஜாதி பேர் கொண்ட தெருக்கள், சாலைகள், குக்கிராமங்கள் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
கிராம வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தீர்மானம் நிறைவேற்றினர்.
வார்டு உறுப்பினர்கள் ஆனந்தன், அன்பழகன், அர்ச்சனா, மஞ்சுளா, கலையரசி, மாணவர் அணி அமைப்பாளர் கவுதமன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.