ADDED : ஜன 13, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பேத்தியைக் காணவில்லை என தாத்தா, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகள் பொம்மி, 19; இவரை கடந்த 8ம் தேதி மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாத்தா பூங்காவனம் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.