ADDED : மார் 09, 2026 04:48 AM

அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.
அதையொட்டி கடந்த 6ம் தேதி செல்வவிநாயகர், பாலமுருகன், அம்பாள், பாவாடைராயன், சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை செய்து காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கரகம் ஜோடித்து அம்பாள் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணியளவில் ஆடு, கோழி படையலிட்டு மயான கொள்ளை புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை சர்வ சக்தி விஜி அம்மா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
