/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிக்னலில் பசுமை பந்தல்: வாகன ஓட்டிகள் நிம்மதி
/
சிக்னலில் பசுமை பந்தல்: வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : மார் 24, 2025 04:34 AM

செஞ்சி: செஞ்சியில் வெயிலின் தாக்கத்தை போக்க சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெரு நகரங்களில் சிக்னல் உள்ள இடங்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. அந்த நேரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மீள சிக்னல் உள்ள இடங்களில் பச்சை நிறத்திலான பந்தல் அமைக்கப்படுகிறது.
இதற்கு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு இருந்ததால் தற்போது சிறு நகரங்களில் கூட பசுமை பந்தல் அமைக்கப்படுகிறது.
செஞ்சி கூட்ரோட்டில் உள்ள சிக்னல் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் காத்திருக்கும் இடங்களில் பேரூராட்சி சேர்மன் மொக்தியார் ஏற்பாட்டின் பேரில், பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.