/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரீன் பாரடைஸ் பள்ளி ஆண்டு விழா
/
கிரீன் பாரடைஸ் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஏப் 22, 2025 04:50 AM

திண்டிவனம்: மயிலம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி 7வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளி முதன்மை இயக்குனர் வனஜா சண்முகம் முன்னிலை வகித்தார்.
விழாவில் நடிகர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாண வர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்வி மற்றும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
கல்வி ஆண்டின் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், நூறு சதவீத வருகை புரிந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
பள்ளி செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
விழாவில் மாணவர்களின் நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.