
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம் நடந்தது.
குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஆனந்தன், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் லட்சுமி நாராயணன், நவீன் மற்றும் அலுவலர்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் கோரும் மனுக்கள், மொபைல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகார சான்று கோரிக்கை, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு குறித்தும் புகார் மனுக்களாக அளித்தனர்.