/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் குறைகேட்புக் கூட்டம்
/
மேல்மலையனுாரில் குறைகேட்புக் கூட்டம்
ADDED : ஏப் 26, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார். தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மானியத்தில் அதிகளவு வேளாண் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் கவுதமன், பட்டு வளர்ச்சி இளநிலை ஆய்வாளர் ஜெயலட்சுமி, கமிட்டி கண்காணிப்பாளர் ஞானம், கால்நடை டாக்டர் அருண், வேளாண் அலுவலர் பிரபு சங்கர், விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.

