ADDED : டிச 15, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நாளை 16ம் தேதி நடைபெற இருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வெள்ள நிவாரணம் மற்றும் பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக நாளை 16ம் தேதி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.