/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டம்; 226 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம்; 226 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜன 09, 2024 01:07 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 226 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல் என பல்வேறு துறை சார்ந்து 226 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) சரஸ்வதி, சப் கலெக்டர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து, ஆதிதிரா விடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.