விழுப்புரம் : மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்க உள்ளதாக,
மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் செப்., மாதத்திற்கான கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
வரும் 2ம் தேதி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகம்; 9ம் தேதி கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம்; 16ம் தேதி செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகம்; 23ம் தேதி திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகம்; 25ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் கூட்டம் நடக்கிறது. இதில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.