ADDED : மே 27, 2025 07:10 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பொது மக்களின் மனுக்கள் பெட்டியில் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைதோறும் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்து வருகிறது.
தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில், ஆண்டு தோறும் மே மாதம் நடக்கும் ஜமாபந்தி முகாம் தொடங்கி நடந்து வருகிறது. 9 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி தொடங்கி நடந்து வருவதால், திங்கள் கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்த ஏராளமான பொதுமக்கள், கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில், தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். இந்த மனுக்கள், மாலையில் எடுக்கப்பட்டு, பதிவு செய்து, அந்தந்த துறை சார்ந்த அலுவலர் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.