/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருமகாரிய கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
/
கருமகாரிய கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
ADDED : பிப் 01, 2024 05:43 AM

செஞ்சி: செஞ்சியில் 10.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கருமகாரிய கூடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
செஞ்சி பேரூராட்சி சார்பில் திண்டிவனம் சாலை சங்கராபரணி ஆற்றங்கரையில் 10.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கரும காரிய கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கவுன்சிலர் அகல்யா வேலு முன்னிலை வகித்தார். சம்பத் வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, வழக்கறிஞர் தமிழ்செல்வி கர்ணன், தொண்டரணி பாஷா, கவுன்சிலர் நுார்ஜகான் ஜாபர், முன்னாள் தலைவர் ராமு, முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.