/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.16 கோடியில் குடிநீர் திட்டப் பணி வளவனுாரில் அடிக்கல் நாட்டு விழா

ADDED : ஜன 30, 2024 06:26 AM

விழுப்புரம் : வளவனுார் பேரூராட்சியில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
வளவனுார் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த பணிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சேர்மன் மீனாட்சி ஜீவா, செயல் அலுவலர் அண்ணாதுரை, பேரூராட்சி செயலாளர் ஜீவா, தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் சம்பத்.
அவைத் தலைவர் சரோபஜி, துணைத் தலைவர் அசோக், பொருளாளர் ரகுமான், கவுன்சிலர்கள் வடிவேல், யுவராஜா, கந்தன், பார்த்திபன், உமாமகேஸ்வரி சுகுமாறன், வார்டு செயலாளர்கள் ராம்குமார், முருகன், ஜாபர், ராஜா சம்பத், குமார் பங்கேற்றனர்.