தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : செப் 26, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியைத் தொடராத மாணவர்களைக் கண்டறிந்து உயர்கல்வி, தொழிற்கல்வியில் சேர்ந்து படிப்பதற்கான உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை தாங்கி பேசி, மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை வழங்கினார். கல்லுாரி சி.இ.ஓ., மணிகண்டன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர் நாகமணி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் செல்வகுமார், முன்னோடி வங்கி மேலாளர் சித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், திறன் மேம்பாட்டு கழக முதல்வர் லாவண்யா, பள்ளி துணை ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, ஞானமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

கடந்த இரண்டு கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத 28 மாணவர்கள் செஞ்சி அரசு ஐ.டி.ஐ., அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக், திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரி ஆகியவற்றில் 28 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை நடந்தது. இதே போல் அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us