ADDED : ஜன 31, 2026 06:04 AM
விழுப்புரம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
பின், அவர் பேசுகையில், மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்று, தற்போது பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், காணை, கண்டமங்கலம், கோலியனுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார் வட்டாரங்களில் இருந்து 28 பள்ளிகளைச் சேர்ந்த 158 மாணவர்களுக்கு முதல்கட்டமாக வழிகாட்டி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மாணவர்கள் நன்றாக படித்து அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்.
சி.இ.ஓ., அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், துணை கலெக்டர் (பயிற்சி) கதிர் செல்வி, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (பயிற்சி) இளவரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
