/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சின்னநெற்குணம் நெல்லையப்ப சாமி கோவிலில் குருபூஜை விழா
/
சின்னநெற்குணம் நெல்லையப்ப சாமி கோவிலில் குருபூஜை விழா
சின்னநெற்குணம் நெல்லையப்ப சாமி கோவிலில் குருபூஜை விழா
சின்னநெற்குணம் நெல்லையப்ப சாமி கோவிலில் குருபூஜை விழா
ADDED : ஜன 07, 2025 06:26 AM

மயிலம்: மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தில் உள்ள காந்திமதி உடனுறை நெல்லையப்ப சுவாமி கோவிலில் மார்கழி மாத உற்சவம், மற்றும் மவுன சாது பால ஞான சுவாமிகளின் ஜீவசமாதியில் மகா குருபூஜை விழா நேற்று நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை காந்திமதியம்மன் உடனுறை நெல்லையப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கோவில் வளாகத்தில் உள்ள சித்தர் மவுன சாது பால ஞான சுவாமி பீடத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நடந்த ஆன்மிக சொற்பொழிவிற்கு நெல்லையப்ப சுவாமிகள் அறக்கட்டளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகி சிவனடியார் மனோகரன் முன்னிலை வகித்தனர்.
திருமங்கலம் சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ வாமதேவ கணேசன் சுவாமிகள், சிவனடியார் கோவை பதஞ்சலீஸ்வரன் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.
குரு பூஜை விழா ஏற்பாடுகளை சிவனடியார் பொன்முடி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

