நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த காரணைபெரிச்சானுார் கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ.பியின் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.ஐ சண்முகம் தலைமையிலான போலீசார் காரணைபெரிச்சானுார் கிராமத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் ஞானவேல், 62; என்பவரது மளிகை கடையில் குட்கா விற்பது தெரியவந்தது. பின்னர் இவரது வீடு மற்றும் கடையை சோதனை செய்ததில் 95 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ஞானவேலை கைது செய்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.