நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பங்க் கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் விழுப்புரம் புறநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, விழுப்புரம் அயினம்பாளையம் பகுதியில், பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், 41; என்பவரது பங்க் கடையில் சோதனையிட்டபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மாணிக்கத்தை கைது செய்தனர்.