ADDED : ஜூன் 04, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார், தொரவி கிராமத்தில் சண்முகம், 30; என்பவர் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில், குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி விற்றது தெரியவந்தது.
உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 30 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.