/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெங்களூருவில் இருந்து கடத்தல் ரூ.5.58 லட்சம் குட்கா பறிமுதல்
/
பெங்களூருவில் இருந்து கடத்தல் ரூ.5.58 லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கடத்தல் ரூ.5.58 லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கடத்தல் ரூ.5.58 லட்சம் குட்கா பறிமுதல்
ADDED : நவ 04, 2024 07:02 AM

செஞ்சி : அனந்தபுரம் அருகே, பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 5.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனந்தபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், சண்முகம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் பனமலை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தோஸ்த் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 31 மூட்டைகளில் 350 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை, பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 5.58 லட்சம் ரூபாய் ஆகும்,
இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து, வேனில் வந்த செஞ்சி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, 47; வேனை ஓட்டி வந்த மலையரசன்குப்பம் கண்ணன் மகன் சுபாஷ், 29; ஆகியோரை கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.