/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரம் அருகே காரில் கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

ADDED : நவ 05, 2024 06:46 AM

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அருகே ௬ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கூட்ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போதைப்பொருள் தடுப்புப் படை சப்இன்ஸ்பெக்டர் சண்முகம், கண்டாச்சிபுரம் சப்இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, சரவணன் ஆகியோர் கூட்ரோடு பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது, திருவண்ணாமலையிலிருந்து வந்த கார் ஒன்று போலீஸ் சோதனைக்கு நிற்காமல் நின்றிருந்த சப்இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் மீது மோதிச்சென்றது. இதில் சண்முகத்தின் வலது கை எலும்பு முறிந்தது.
இதை தொடர்ந்து போலீசாரிடமிருந்து தப்பிச்சென்ற கார், அடுக்கம் காப்புக்காட்டுப் பகுதியில் நிற்காமல் சென்ற காரை வளைத்து பிடித்தனர். அந்த காரில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 491 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.