ADDED : ஜன 01, 2024 12:18 AM
விழுப்புரம்: மாவட்ட சக்ஷம் சார்பில் தேசிய மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் உரிமைச் சட்ட தினம் விழுப்புரத்தில் நடந்தது.
மாவட்ட இணைச் செயலாளர் பொற்செல்வி தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தலைவர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், மாற்றுத் திறனாளிகள் தன்னம்பிக்கையோடு தங்களின் காலில் நிற்க வேண்டும்.
சிறு, குறு, சுயதொழில் வகைகள் குறித்தும், அரசின் கடனுதவி, மானிய தொகை குறித்தும் பேசினார்.
மாநிலச் செயலாளர் சுரேஷ், மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம், அவர்களுக்கான தனித்தனி பயிற்சி, சாதனைகள் குறித்து விளக்கினார்.
மாநில புரவலர் சந்திரசேகரன், மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள், அரசு உதவிகள் குறித்து கூறினார். சென்னை சில்க்ஸ் மேலாளர் சரவணன் வாழ்த்திப் பேசினார். 104 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். வழக்கறிஞர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சசிகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொருளாளர் பிரபாவதி நன்றி கூறினார்.