/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவெண்ணெய்நல்லுாரில் கைவினை பொருள் கண்காட்சி
/
திருவெண்ணெய்நல்லுாரில் கைவினை பொருள் கண்காட்சி
ADDED : ஜன 08, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில் மாதிரி பொருட்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு தலைப்புகள் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வைத்திருந்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் கண்ணகி, சிவசங்கரி உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.