/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
பள்ளி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜன 18, 2024 04:25 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்த பள்ளி மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் காலனியை சேர்ந்த மீன் வியாபாரி அய்யப்பன் என்பவரது மகள் சுபஸ்ரீ ,17; இவர் கடந்த 15 ம்தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முறையான சிகிச்சை அளிக்காததால் சுபஸ்ரீ இறந்ததாக உறவினர்கள் மருத்துவமனை வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் டி.எஸ்.பி., சுரேஷ், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் புகாரின் பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
இதையடுத்து நேற்று முன்தினம் அய்யப்பன் விக்கிரவாண்டி போலீசில் தனது மகளுக்கு டாக்டர்கள் கழுத்தில் ஊசி செலுத்தி குளுகோஸ் ஏற்றிய ஒரு மணி நேரத்தில் இறந்தார்.
டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நேற்று பிற்பகல் 12.25 மணிக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் மணிகண்டன், வெண்ணிலா ஆகியோர் மாணவி சுபஸ்ரீ உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின் பிற்பகல் 2 மணிக்கு மாணவியின் உடலை தந்தை அய்யப்பனிடம் ஒப்படைத்தனர்.