
மயிலம்: மயிலம், கூட்டேரிப்பட்டு, செண்டூர், ஆலகிராமம், ரெட்டணை பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கலச ஸ்தாபனம், மகா ஹோமம் நடந்தது. பின், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பாதாம், பிஸ்தா, தேன், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் ஜனகவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் மற்றும் வடைமாலை சாற்றி சிறப்பு பூஜை நடந்தது.
செஞ்சி
செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவில் பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனுார் மிருதுவ சஞ்சீவி மகிமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.