/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா
/
எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : மே 07, 2025 11:51 PM
வானூர்: ராவுத்தன்குப்பம் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
வானூர் அடுத்த ராவுத்தன்குப்பம் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி விநாயகர் உற்சவத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, அன்று முதல் 6ம் தேதி வரை, தினசரி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் காலை 11;00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல், பகல் 2;00 மணிக்கு காளி வள்ளான் கோட்டையை அழித்தல், அம்மன் பாரி வேட்டையாடுதல் நடந்தது. மாலை 6;00 மணிக்கு, செடல் உற்சவம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தி வேன், டிராக்டர், கார் உள்ளிட்ட வாகனங்கள் இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 7;00 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்டு, தேர் வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.