/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மது அருந்த சென்றவர் வலிப்பு ஏற்பட்டு சாவு
/
மது அருந்த சென்றவர் வலிப்பு ஏற்பட்டு சாவு
ADDED : அக் 18, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர் வலிப்பு ஏற்பட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடி கல்பனா சாவ்லா தெருவைச் சேர்ந்தவர் குமார், 55; இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். நேற்று, புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளார்.
அப்போது, இயற்கை உபாதை கழிக்க பார் பின்புறமுள்ள முத்தமிழ் நகருக்குச் சென்றபோது, வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து இறந்தார்.
வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.